--- --:--:-- --

இன்று முதல் இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை..!

2

மிழ்நாட்டில் இன்றைய மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

 

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு, வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.

 

இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று அதிகாலை தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா கடற்கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் (IMD) அறிவித்துள்ளது. இதனால், அந்தப் பகுதிகளிலும் தமிழ்நாட்டின் சில கடலோர மாவட்டங்களிலும் கனமழை, பலத்த காற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். இதன் காரணமாக கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (09.09.2025) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

மேலும் வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (10.09.2025) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Right Menu Icon