தூத்துக்குடியில் பெய்த கனமழை..!
தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை காரணமாக ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்திரா நகர் பகுதியில் மழை நீர் தேங்கிய இடங்களில் கொட்டும் மழையில் அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
அந்த பகுதியில் நிரந்தரமாக மழை நீர் வடிகால் அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களிடம் அவர் உறுதி அளித்தார்.






