--- --:--:-- --

குணமடைந்தவர்களுக்கு இரண்டாவது முறையாக கொரொனா பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை..!

4

ங்கிலாந்தில் பரவிய புதிய வீரியமிக்க கொரோனா வைரஸால் குணமடைந்தவர்களுக்கு இரண்டாவது முறையாக பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும், உயிரிழப்பு குறித்த பீதியும் தேவையில்லை என்றும் ஆய்வாளர்கள் நம்பிக்கை அளித்துள்ளனர்.

 

புதிய வகை கொரொனா பாதிப்புடைய பல்வேறு நோயாளிகளை 28 நாள் மருத்துவ கண்காணிப்பில் வைத்து இங்கிலாந்தின் பப்ளிக் ஹெல்த் என்ற தொண்டு அமைப்பால் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இந்த முடிவுகள் வெளியாகியுள்ளன.

 

வீரியமிக்க கொரொனா பாதிப்புடையவர்களையும் ஏற்கனவே உள்ள கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களையும் தனித்தனியாக சிகிச்சை அளித்து கண்காணித்தபோது பெரிய வேறுபாடு தென்படவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

Leave a Reply

Right Menu Icon