பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியர்..!
நெல்லை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். நெல்லை மாவட்டம் திசையன்விளை அரசு உதவிபெறும் தனியார் உயர்நிலை பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
பிளஸ் டூ படிக்கும் மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடப்பதாக கூறிய பள்ளியின் தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் பாலியல் ரீதியாக மாணவிகளிடம் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவிக்கையில் பிரச்சனை காவல்துறை வரை சென்றது.
மேலும் பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.





