குரூப் 2 தேர்வுகளுக்கு ஹால் டிக்கெட் இன்று வெளியீடு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வழங்கும் குரூப் 2 தேர்வுகளுக்கு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த மாதம் 20ஆம் தேதி வெளியிட்டது.
குரூப்-2 பணியில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் துணை அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 57 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
குரூப் 2a வில் தமிழ்நாடு மின்விசை, நிதி உள்கட்டமைப்பு, மேம்பாட்டு கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரின் நேர்முக உதவியாளர் கூட்டுறவு சங்கங்கள், முதுநிலை ஆய்வாளர், உள்ளாட்சி நிதி தணிக்கை உதவியாளர் என 1,820 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வுக்கு ஏழு லட்சத்து 93 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.
முதல் நிலை எழுத்து தேர்வு செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என்று அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.






