மது அருந்திவிட்டு ஆற்றில் குளித்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!
தென்காசியில் ஆற்றில் குளித்த இளைஞர் மாயமான நிலையில் தீயணைப்பு துறையினர் இளைஞரை சடலமாக மீட்டனர். தென்காசி நகர் பகுதியில் அமைந்துள்ள யானை பாலம் அருகே உள்ள சிற்றாறு ஆற்றுப்பகுதியில் நான்கு பேர் சேர்ந்து மது அருந்தியுள்ளனர்.
அப்பொழுது இருவர் கூடுதலாக மது வாங்குவதற்காக மதுக்கடைக்கு சென்ற நிலையில் இருவர் மட்டும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது செங்கோட்டை கதிரவன் காலனியைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் தண்ணீரில் மூழ்கிதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவரது நண்பர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஆற்றுப் பகுதியில் இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டனர். 36 மணி நேரத்தில் எரிதல் போராட்டத்திற்கு பின்னர் இளைஞரின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.






