--- --:--:-- --

ஏரியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை..!

9

சூர் அருகே ஏரியில் இருந்த பச்சிளம் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏரியில் பச்சிளம் குழந்தையின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஏரியிலிருந்து குழந்தையின் சடலத்தை மீட்டனர். விசாரணையில் பிறந்து ஒரு வாரமே ஆன பெண் குழந்தை என்பது தெரியவந்தது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் பச்சிளம் குழந்தையை வீசிச் சென்றது யார் என தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon