இளம்பெண்ணை கடத்திய மூதாட்டி! 15 சவரன் தங்க நகைகள் பறிப்பு
சென்னை கொடுங்கையூரில் இளம்பெண்ணை கடத்தி 15 சவரன் நகைகளை பறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. முத்தமிழ் நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவரிடம் மூதாட்டி ஒருவர் சாலையை கடந்து விடும் படி கேட்டுள்ளார்.
இதையடுத்து தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையை கடந்து விட்ட போது அந்த மூதாட்டி இளம்பெண்ணை ஆட்டோவை தள்ளி கடத்தி சென்றுள்ளார். ஆட்டோவில் இருந்த 4 பெண்கள் அந்த பெண்ணை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கடத்தி சென்று 15 சவரன் நகைகளை பறித்துக் கொண்டு அங்கேயே விட்டு விட்டுச் சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





