அரசு ஊழியர்கள் இனி அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும்
அரசு ஊழியர்கள் பணி நேரத்தின்போது கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறையின் முதன்மை செயலாளர் சுவர்ணா அனைத்து துறை முதன்மை செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி இனி அரசு பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் அடையாள அட்டையை அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். பெரும்பாலான அரசு அலுவலர்கள் பணி நேரத்தின்போது அடையாள அட்டை அணிவதில்லை என்றும், அதனால் தொடர்ந்து புகார் வருவதாகவும், அதுபோன்ற புகார் வரும் பட்சத்தில் அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சங்கத்தின் முதன்மை செயலாளர் சுவர்ணா உத்தரவிட்டுள்ளார்.
அடையாள அட்டை அணிவது தொடர்பாக துறை செயலாளர்களும் மாவட்ட ஆட்சியர் கண்காணிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





