--- --:--:-- --

ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!

4

ங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே உயர்ந்து வருவது சாமானிய மக்களை பெரிதும் பாதித்துள்ளது. பங்குச்சந்தைகளில் ஏற்படும் மாற்றம் காரணமாகவும், உலக பொருளாதார சூழல் காரணமாகவும், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

 

நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,235-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,340-க்கும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,885-க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை ஒரே நாளில் ரூ.3 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.114-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Right Menu Icon