--- --:--:-- --

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் குறைந்துள்ள தங்க விலை..!

2

சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து வரும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 ஆயிரத்தை கடந்துள்ளதால் சாமானிய மக்கள் நகையை நினைத்து பார்க்க கூட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து 2 நாட்களாக காலை, மாலை என இரு வேளையும் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கே சவரனுக்கு ரூ.1000க்கும் மேல் தங்கம் விலை உயர்ந்து வந்தது. தொடர்ந்து நேற்று தான் தங்கம் விலை சற்று குறைந்து நகை பிரியர்களை ஆறுதல் அடைய செய்தது.

அதன் படி, நேற்று செப்டம்பர் 24ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.10,600க்கும் சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.84,800க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து 2வது நாளாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இது நகை பிரியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் இன்று செப்டம்பர் 25ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 குறைந்து ஒரு கிராம் ரூ.10,510க்கும் சவரனுக்கு ரூ.720 குறைந்து ஒரு சவரன் ரூ.84,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.8,700க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.69,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மட்டும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் 150 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,50,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Right Menu Icon