மீண்டும் எகிறும் தங்கம் விலை..!
நவம்பர் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில், கடந்த 4 நாட்களுக்கும் மேலாக தங்கம் விலை இறங்கு முகத்தில் இருந்தது. அதன்படி நேற்று 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ஒரு கிராம் ரூ.11,400க்கும் சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ஒரு சவரன் ரூ.91,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இன்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 4 நாட்களுக்கு பிறகு இன்று உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,500க்கும் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல், 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,600க்கும் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.76,800க்கும் விற்பனையானது. மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.173க்கும் ஒரு கிலோ ரூ.1,73,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று மாலை நிலவரப்படி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,600க்கும் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,685க்கும் சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.77,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.176க்கும் ஒரு கிலோ ரூ.1,76,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.






