--- --:--:-- --

அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை..!

4

சென்னையில் கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதால் வணிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.

 

ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.அந்த வகையில், சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 10 ரூபாய் 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. 1750 ரூபாய்க்கு விற்று வந்த வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர், தற்போது 1739 ரூபாய் 50 காசுக்கு விற்பனையாகிறது.

 

இதே போன்று, மற்ற மெட்ரோ நகரங்களான டெல்லி, கொல்கத்தா, மும்பையிலும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.

 

அதே சமயம், சென்னையில், வீட்டில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் எவ்வித மாற்றமும் இன்றி, 868 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon