--- --:--:-- --

கேஸ் சிலிண்டர் விலை ரூ.105 உயர்வு..!

3

ணிக பயன்பாடு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 105 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் கேஸ் மற்றும் வணிகப் பயன்பாடு, எரிவாயு சிலிண்டர் விலையை ஒன்றிய எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 3ஆம் நாள் எண்ணெய் நிறுவனங்கள் விலையை நிர்ணயிக்கின்றன என்று அறிவிக்கப்பட்டது.

 

அதில் வணிகரீதியாக பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டின் சிலிண்டர் விலை 2,040 ஆக இருந்தது.

 

அவற்றின் விலை 105 ரூபாய் உயர்த்தப்பட்டதன் மூலம் தற்பொழுது 2,145 ரூபாய் 50 காசாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

 

Right Menu Icon