--- --:--:-- --

புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு..!

1

புதுவையில் உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு குளறுபடிகளை சரி செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

 

புதுச்சேரியில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இந்த நிலையில் இரண்டு முறை அறிவிக்கப்பட்ட ஊராட்சி தேர்தலிலும் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக கட்சிகளும் நீதிமன்றத்திற்கு சென்றனர். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மீண்டும் இன்று உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியிருக்கிறது.

 

இந்தத் தேர்தலை பொறுத்தவரை பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு வார்டு ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனக்கூறி திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

 

இதன் காரணமாக புதுச்சேரியில் தனியார் பேருந்துகள் முற்றிலுமாக இயக்கப்படவில்லை. பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Right Menu Icon