மோசடி வழக்கு..தவெக நிர்வாகி கைது..!
கரூர் குளித்தலையில் அரசு பள்ளி ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் தவெக நிர்வாகி ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியை சங்கீதாவின் ஆவணங்களை பயன்படுத்தி லோனில் கார் வாங்கியதுடன், தவணைத் தொகையை செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.
இதுகுறித்து கேட்டபோது, தன்னை தகாத வார்த்தைகளில் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக சங்கீதா புகாரளித்துள்ளார். இதன்பேரில், ராஜாவை போலீசார் கைது செய்தனர்.






