உ.பி.யில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..!
உத்திரப்பிரதேசத்தில் ஏழாம் கட்ட மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. உத்திரப்பிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. 6 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் தொடங்கியுள்ளது.
அசாம்கார், மாவ், ஜான்பூர், வாரணாசி 14 தொகுதிகளில் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பதிவான வாக்குகள் வரும் பத்தாம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.







