--- --:--:-- --

இருசக்கர வாகனங்களை திருடிய பெண் காவலர் மற்றும் அவரது கணவர்..!

2

நெல்லை மாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் வழக்கு சம்பந்தமாக கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்களை திருடிய பெண் காவலரும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டனர்.

 

இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வரும் கிரேசியா இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் ஆள் இல்லா நேரம் பார்த்து தனது கணவர் அன்புமணியை வரவழைத்து இரு சக்கர வாகனங்களை திருடி வந்தது தனிப்படை காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இதை தொடர்ந்து பெண் காவல் துறையினர் கிரேசியா மற்றும் அவரது கணவர் அன்புமணியை கைது செய்த காவல்துறையினர் காவல் நிலையத்தில் இருந்து அவர்கள் திருடிய 3 இருசக்கர வாகனங்கள் ஒரு மொபைல் போன் மற்றும் வெள்ளி அரைஞாண் கயிறு ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon