--- --:--:-- --

பிரபல நடிகர் சோனு சூட்டிற்க்கு கோவில் கட்டிய ரசிகர்கள்..!

2

தெலுங்கானா மாநிலம் சித்தி பேட்டையில் பிரபல நடிகர் சோனு சூட்டிற்க்கு அவருடைய ரசிகர்கள் கோவில் கட்டியுள்ளனர். சிம்புவின் ஒஸ்தி, பிரபுதேவாவின் தேவி உள்ளிட்ட தமிழ் படங்களிலும் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள சோனு சூட் கொரொனா காலத்தில் பல்வேறு உதவிகளை செய்துள்ளார்.

 

அவரது தன்னலம் கருதாத சேவையை கவுரவிக்கும் வகையில் சித்தி பேட்டை மாவட்டத்தில் அவருடைய ரசிகர்கள் கோயில் கட்டி நேற்று திறந்துள்ளனர். மேலும் சிலைக்கு தீபாராதனை காட்டியும் ரசிகர்கள் வழிபாடு நடத்தியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon