--- --:--:-- --

பாலியல் வன்கொடுமை புகாரில் பிரபல மடாதிபதி கைது..!

3

ர்நாடகாவில் மாணவிகள் 2 பேரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட பிரபல மடாதிபதி சிவமூர்த்தி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

 

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவிலுள்ள மடாதிபதி சிவமூர்த்தி மடத்தின் சார்பில் நடத்தப்படும் பள்ளியில் தங்கிப் பயின்ற 15 மற்றும் 16 வயது மாணவிகளை கடந்த இரண்டரை ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

 

இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் 5 பேர் மீது சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் மடாதிபதி சிவமூர்த்தி கைது செய்த காவல்துறையினர் சித்ரதுர்கா நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து மடாதிபதி சித்ரதுர்கா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

 

இதனிடையே மடாதிபதி மீதான புகாரில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் இரண்டு நாட்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளது.

 

Right Menu Icon