--- --:--:-- --

40 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் சென்றால் அபராதம் விதிக்கப்படும் – காவல்துறை விளக்கம்

9

சென்னையில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனத்தை ஓட்டினால் அபராதம் என்று நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

சென்னை நகரத்திற்குள் பகல் நேரத்தில் 40 கிலோமீட்டர் வேகத்திற்குள்ளும், இரவு நேரத்தில் 50 கிலோமீட்டர் வேகத்திற்குள்ளும் அனைத்து வகையான வாகனங்கள் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 

நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை கடந்தால் ஸ்பீடு கிரேடார் மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இந்த நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக போக்குவரத்து காவல்துறை அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் விளக்க கடிதம் பதிவிட்டுள்ளது. அதில் தற்பொழுதைக்கு ரேடார் கண் வாகனங்களின் வேகம் குறித்து டேட்டா எடுப்பதற்கு மட்டுமே பதிவு செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Right Menu Icon