யுகாதி திருநாளுக்கு இபிஎஸ் வாழ்த்து..!
தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் தனது யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளை எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
வாழ்த்துச் செய்தியில், தமிழகத்தில் பலநூறு ஆண்டுகளாய் நீங்கள் ஒருமித்து வாழ்ந்து வருவது தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டில் அனைத்து காரியங்களும் வெற்றி பெறவும் அவர் வாழ்த்தியுள்ளார்.





