வாட்ஸ் ஆப் மூலம் போதை பொருள் விற்பனை..!
கேரளாவில் போதைப்பொருளை வாட்ஸ்அப் மூலம் விற்பனை செய்து வந்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி போதை பொருட்களை பெங்களூருவிலிருந்து கொரியர் நிறுவனம் மூலம் அனுப்பி வைப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனால் கரூர் மாவட்ட போலீசார் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிரடி சோதனை நடத்தினர் . அப்போது ஒரு நிறுவனத்தில் பார்சலில் வந்த போதை பொருளை வாங்கிய போது கையும் களவுமாக பிடித்தனர். கணவன் மற்றும் அவரது மனைவி இருவரும் போதை பொருள் விற்பனை செய்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
அவர்களிடமிருந்து 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான 2 கிலோ போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.






