--- --:--:-- --

விழுப்புரம், செஞ்சி பகுதியில் போதை மாத்திரை விற்பனை..!

8

செஞ்சி காவல் நிலையம் காவல் ஆய்வாளர் அண்ணாதுரை, உதவி ஆய்வாளர் சண்முகம் காவலர்களின் தலைமையில் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அம்மாக்குளம் ஏரிக்கரை அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 நபர்களை விசாரணை செய்தனர்.

 

விசாரணையில், சென்னை குன்றத்தூர் வாணியர் தெரு வெங்கடேசன் என்பவரின் மகன் ராஜ் என்கின்ற கோவிந்தராஜ் (25), செஞ்சி அம்மாக்குளம் பகுதியை சேர்ந்த தனசேகர் மகன் அன்பரசன் (22) என தெரியவந்தது. இவர்களிடம் சோதனை மேற்கொண்டதில் 17 போதை மாத்திரைகள், ஊசிகள் மற்றும் இருசக்கர வாகனம், பணம் ரூபாய் 2000 கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

 

அதே போல, விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகே உதவி ஆய்வாளர் ராபர்ட் மற்றும் காவலர்கள் தலைமையில் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது பழைய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.

 

விசாரணையில், விழுப்புரம் ஜி.ஆர்.பி தெருவை சேர்ந்த செல்வகுமார் என்பவரின் மகன் சதா என்கிற சதா பவகர்ணன் மற்றும் விழுப்புரம் வழுதரெட்டி கங்கை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மனோகரன் மகன் மகேஷ் (20) என தெரியவந்தது.  இவர்களை சோதனை செய்ததில் 10 போதை மாத்திரைகள் மற்றும் ஊசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Right Menu Icon