இந்த வழியாக போகக்கூடாது.. சாலையிலேயே வைக்கப்பட்ட சடலம்..!
கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியில் மூதாட்டியின் உடலை தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் சடலத்தை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடல் நலக்குறைவால் உயிரிழந்த மூதாட்டி உடலை மயானத்தில் தகனம் செய்ய எடுத்துச் சென்றுள்ளனர். அப்பொழுது தங்களுடைய இந்த பாதையில் உடலை எடுத்துச் செல்லக்கூடாது எனக் கூறி தனி நபர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சடலத்தை சாலையில் போட்டு போராட்டம் நடத்தினர். மேலும் மயானத்திற்கு செல்லும் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தியதை எடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





