வங்கி பக்கமே வராத ஏழை குடும்பத்திற்கு விழுந்த இடி..!
சிவகாசியில் வங்கி பக்கமே வராதவருக்கு 23 லட்சம் ரூபாய்க்கு போலியான நகை அடமானம் வைத்து கடன் பெற்றதாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாமிபுரம் காலனியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி செல்வம் என்பவருக்கு சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ள யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில் போலியான நகைகளை கொடுத்து 23 லட்சத்து 90 ஆயிரம் ரொக்க பணம் பெற்றதாகவும் அந்த பணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கூறியதிலிருந்து அதிர்ச்சி அடைந்த செல்வம் குடும்பத்தினர் வங்கிக்கு நேரடியாக சென்ற அலுவலர்களிடம் நோட்டீஸ் குறித்து விளக்கம் கேட்டனர்.
23 லட்சம் நகை கடனை உடனடியாக திரும்ப செலுத்துமாறு அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர். வங்கி பக்கமே வராத தங்கள் குடும்பத்தாருக்கு எப்படி இது போன்ற முன்னறிவிப்பு நோட்டீஸ் வந்தது என கேள்வி எழுப்பினர்.
அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் தங்களிடம் தங்க நகையே கிடையாது என்று கூறியவர்கள் இதில் காவல்துறை தலையிட்டு சம்பந்தப்பட்டவர்களை பிடித்து தங்களுக்கு நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





