ஒரே பெயரில் மின் இணைப்புகள் வழங்க கூடாது..!
ஒரு வளாகத்தில் ஒரே பெயரின் கீழ் வழங்கப்பட்ட மின் இணைப்புகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரிய வணிக பிரிவு தலைமை பொறியாளர் அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் ஒரே பெயரில் பெற்ற இணைப்புகளை ஒருங்கிணைக்காமலும், உயரழுத்த இணைப்பாக மாற்றறாமலும் உள்ளவருக்கு 3 மாதம் அவகாசம் அளித்து நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான உயர் அதிகாரிகளின் ஆய்வின்போது பல இணைப்புகள் ஒரே பெயரின் கீழ் ஒரே வளாகத்தில் இருப்பது தெரியவந்தால் பொறுப்பதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடியிருப்பிலும் எத்தனை இணைப்புகள் கொடுக்கப்பட்டது என கணக்கெடுப்பதோடு குளிர்சாதனக் கருவி, குடிநீர் வினியோகம், பொது இடங்களில் பயன்படுத்தி மின் விளக்குகள், தடையற்ற மின் வினியோகம் செய்யும் கருவி உள்ளிட்டவற்றுக்கு ஒரே வளாகத்திற்குள் தனி இணைப்பு கண்டிப்பாக கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





