நகர்மன்ற கூட்டத்திலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து போராட்டம்..!
நெல்லை மாவட்டம் அருகே நடைபெற்ற நகர மன்ற கூட்டத்திலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து வித்தியாசமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேரமங்கலம் பேரூராட்சியில் வார்டு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொள்ள திமுக உறுப்பினர்கள் திடீரென கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து வாயில் கருப்பு துணி கட்டியபடி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் ஒவ்வொரு கூட்டத்திலும் நிறைய கோரிக்கைகள் வைத்திருப்பதாகவும் அதற்கு தீர்மானம் மற்றும் நிறைவேற்றப்பட்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதில்லை எனவும் குற்றம் சாட்டினர்.
மாநகராட்சி நிர்வாகத்தில் பெண் தலைவர் உள்ள நிலையில் அவரது கணவரின் தலையீடு அதிகமாக உள்ளது எனவும் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை கேட்க போனால் பதவியை ராஜினாமா செய்ய வைப்போம் என மிரட்டுவதாகவும் வார்டு உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.






