--- --:--:-- --

பரப்புரையின்போது மாரடைப்பு ஏற்பட்டு திமுக வேட்பாளர் உயிரிழப்பு..!

6

ஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சி ஒன்பதாவது வார்டு திமுக வேட்பாளர் தேர்தல் பரப்புரையின் போது நெஞ்சுவலியால் உயிரிழந்தார். ஒன்பதாவது வார்டு பகுதியை சேர்ந்த 65 வயது பெண்மணி திமுக சார்பில் போட்டியிட்டார்.

 

ஒரு வாரமாக தீவிர பரப்புரையில் ஈடுபட்ட அனுசியா இன்று காலை முதலே வீடு வீடாக நடந்து சென்ற ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரித்தார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கிடந்தார்.

 

அதிர்ச்சியடைந்த ஆதரவாளர்கள் உடனடியாக மருத்துவரை வரவழைத்துபரிசோதித்தனர். ஆனால் அனுசுயா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார். அனுசுயாவின் உடல் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon