ஐபிஎல் போட்டிக்கு பயிற்சிக்காக சென்னை வந்த தோனி..!
ஐபிஎல் போட்டிக்கு பயிற்சி எடுப்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி உட்பட வீரர்கள் அனைவரும் சென்னை வந்தடைந்தனர். கொரொனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டால் போட்டிகள் அடுத்த மாதம் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகின்றன.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் வீரர்கள் சென்னையில் ஒரு வாரகாலம் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். அதற்காக தனி விமானம் மூலம் கேப்டன் தோனி, வீரர் சுரேஷ் ரெய்னா கரண் ஷர்மா ஆகியோர் சென்னை வந்தடைந்தனர்.
வீரர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து இருந்தனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு வார காலத்திற்கு பயிற்சியில் ஈடுபடும் சிஎஸ்கே வீரர்கள் இந்த வார இறுதியில் ஐக்கிய அரபு அமீரகம் செல்கின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





