தமிழகத்தில் இன்று 5890 பேருக்கு கொரோனா..! பலியானோர் 117 பேர்…! சென்னையில் ஒரு வாரத்திற்கு பின் ஆயிரத்தை தாண்டியது தொற்று!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,890 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. உயிரிழப்பு 117 ஆக பதிவான நிலையில், சென்னையில் ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் பாதிப்பு ஆயிரத்தை கடந்து இன்று மட்டும் 1,187 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்றும் கடந்த சில நாட்களைப் போலவே தொற்று பாதிப்பு 6 ஆயிரத்திற்கு கீழாக 5890 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,26,245 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 5,556ஆகும். இதனால் இதுவரை குணமானவர்களின் எண்ணிக்கை 2,67,015 ஆகவும் உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் ஒரே நாளில் 117 பேர் பலியாகி உள்ளனர். இதனால் இதுவரையிலான மொத்த பலி எண்ணிக்கை 5,514 ஆக உயர்ந்து உள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து ஆயிரத்திற்கு கீழாக பதிவாகி வந்த நிலையில், இன்று மேலும் வேகமெடுத்து ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சென்னையில் இன்று 1187 பேருக்கு தொற்று உறுதியாகி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,14,260 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் இதுநாள் வரை 34,43,897 பேருக்கு தொற்று சோதனை செய்யப்பட்டு உள்ளது. இன்று மட்டும், 68,301 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தமிழக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் இன்று திருவள்ளுர் மாவட்டத்தில் 495 பேருக்கும், செங்கல்பட்டில் 437, கோவையில் திடீரென பாதிப்பு உயர்ந்து 385 பேருக்கும், தேனியில் 365, காஞ்சிபுரத்தில் 315 என மாவட்டங்களில் அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





