--- --:--:-- --

மத்திய பிரதேச மாநிலத்தில் நேருக்கு நேர் லாரிகள் மோதி விபத்து..!

13

த்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மார்க்கத்தில் வந்து கொண்டிருந்த 2 சரக்கு லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்ததில் 2 லாரிகளின் ஓட்டுநர்களும் உடல் கருகி உயிரிழந்தனர்.

 

சாத்துக்குடி பழங்களை ஏற்றி வந்த ஒரு லாரியும், எதிர்த்திசையில் அரிசி மூட்டைகளை ஏற்றிவந்த ஒரு லாரியும் அதிகாலையில் ஓட்டுநர்களின் தூக்கத்தினால் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேராக மோதிக் கொண்டன. தீப்பிடித்து எரிந்ததால் இரு ஓட்டுனர்களும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

 

லாரியில் இருந்த தொழிலாளர்கள் 4 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon