துறையூர் : தவறான உறவுக்கு பெண்ணை வற்புறுத்திய காவலர் பணியிடை நீக்கம்
திருச்சி மாவட்டம் துறையூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்தவர் சத்யராஜ். இவர் கொப்பம்பட்டி அருகே உள்ள முத்தையா பாளையத்தை சேர்ந்தவர் இவர்.
ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து விசாரணையில் இருந்து வந்த நிலையில் மனைவிகளுக்கு தெரியாமல் புதனாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பெண்ணிடம் முறைகேடான உறவில் இருந்ததோடு அவரை அடித்து துன்புறுத்தி வந்ததாக அந்தப் பெண் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரை தொடர்ந்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் சத்யராஜை பணியிடம் நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்/.சம்பவம் காவலாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





