--- --:--:-- --

பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க முடிவு..!

7

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு பரிந்துரைத்து இருப்பதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் ஒன்று சென்னை மீனம்பாக்கம். விமான நிலையத்திலிருந்து முக்கிய நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பேருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அருகே இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான முடிவை மத்திய விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்தது.

 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தன்னூர், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பரந்தூர், பட்டாளம் ஆகிய இடங்களில் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

இந்நிலையில் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

Right Menu Icon