--- --:--:-- --

உருவானது டிட்வா புயல்..!

3

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் புயலாக உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 6 மணி நேரத்தில் மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்துள்ளது.

 

வடக்கு -வடமேற்கு திசை நோக்கி நகர்ந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு ‘டிட்வா’ என பெயரிடப்பட்டுள்ளது. இது, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், சென்னையின் தென்கிழக்கு பகுதியில் 700 கிலோ மீட்டர் தொலைவில் நிலவி வருகிறது.

 

டிட்வா புயல் அடுத்த 48 மணிநேரத்தில் வடக்கு – வடமேற்கு திசையில் தமிழ்நாடு, புதுச்சேரியை நோக்கி நகரும். இந்த புயலுக்கு ஏமன் பரிந்துரைத்த டித்வா என்ற பெயர் சூட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon