தமிழகத்தை நெருங்கும் ‘டிட்வா’ புயல்..!
இலங்கை கடல் பகுதியில் உருவான டிட்வா புயல், வடதமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருகிறது. இது சென்னையிலிருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாகவும், மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காரைக்காலில் இருந்து 190 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலையிலும் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது.
இந்நிலையில், வட தமிழகம், புதுச்சேரி, ஆந்திர கடல் பகுதியை நாளை அதிகாலை டிட்வா நெருங்கும் என்றும், சென்னையை நெருங்கும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழுந்து கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. டிட்வா புயல் காரணமாக தரைக்காற்று 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






