--- --:--:-- --

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமல்..!

1

மிழகத்தில் தளர்வற்ற ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி, மீன் விற்பனை செய்யும் கடைகள் இன்று காலை திறக்கப்பட்டன .

 

காய்கறி, பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. சந்தைகள், இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

அனைத்து அரசு அலுவலகங்களும் 30 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட உள்ளது. சார் பதிவாளர் அலுவலகங்களில் ஒரு நாளைக்கு 50 விழுக்காடு பெண்கள் மட்டும் பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட உள்ளது. தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

நோய் தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மின் பணியாளர், பிளம்பர், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் தற்போது தொழிலாளர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை உடன் பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் சலூன் கடை திறக்கவும் அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. விற்பனை கடைகள், மிதிவண்டி மற்றும் இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் ஹார்ட்வேர் கடைகள், வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், புத்தகங்கள் எழுது பொருட்கள் விற்பனை கடைகள் இன்று முதல் இயங்கும் வாடகை வாகனங்கள், டாக்சி ஆட்டோக்களில் பயணிகள் உடன் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

டாக்சி ஓட்டுநர் தவிர மூவரும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இருவரும் பயணிக்கலாம்.

Leave a Reply

Right Menu Icon