ராஜஸ்தானில் காருடன் எரிக்கப்பட்ட ஜோடி..!
ராஜஸ்தானில் கடத்தப்பட்டதாக தேடப்பட்டு வந்த இருவர் ஹரியானாவில் வைத்து காரில் வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எரிக்கப்பட்ட காரில் இருவரது சடலங்கள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காரில் இருந்த 20 உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதிலிருந்து அவர்கள் ராஜஸ்தானை சேர்ந்த நசீம் மற்றும் சுனத் என்பதும் இருவரும் கடத்தப்பட்டதாக அவர்களின் உறவினர்கள் புகார் அளித்திருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து இருவரது மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.






