சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் சித்தார்த்..!
பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரியுள்ளார். பஞ்சாபில் பிரதமர் மோடிக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் சித்தார்த் பதிவிட்டது கடும் சர்ச்சைகளையும் இரட்டை அர்த்தம் தெரிவிக்கும் வகையில் கருத்து பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
இந்நிலையில் சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த்தும் மன்னிப்பு கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது உருக்கமான சரியாக புரிந்து கொள்ளப்படாத நகைச்சுவைக்காக மன்னிப்பு கோருவதாகவும் தான் எப்பொழுதும் பெண்ணியத்திற்கு ஆதரவாளர்கள் எனவும் பெண் என்பதால் உங்களை தாக்கும் வகையில் அந்த கருத்தை பதிவிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.






