தமிழகத்தில் 2-வது நாளாக இன்றும் 3 ஆயிரத்திற்கும் கீழாக கொரோனா பாதிப்பு குறைந்தது..!
தமிழகத்தில் இன்றும் 2-வது நாளாக கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்திற்கு கீழாக குறைந்து 2 ஆயிரத்து 869 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் 4 மாதங்களுக்குப் பின் தற்போது 2-வது நாளாக 3 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 2869 ஆகும், இதனால் மொத்த எண்ணிக்கை 7,09,005 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 31 பேர் உயிரிழந்தனர்.தமிழகத்தில் கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,924 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 4 ஆயிரத்து 19 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் 4,019 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது –






