--- --:--:-- --

மருந்தக உரிமையாளர் கழுத்தில் கத்திவைத்து மிரட்டிய நபர்..!

8

சென்னையில் உள்ள மருந்தகம் ஒன்றில் நுழைந்து உரிமையாளரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற ஒரு பெண் உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ராமசாமி என்பவர் வள்ளி மெடிக்கல்ஸ் என்ற பெயரில் மருந்தகம் ஒன்றை நடத்தி வருகிறார்.

 

கடந்த வெள்ளிக்கிழமை கடை மூடும் நேரத்தில் மருந்தகத்திற்கு வந்த ஒரு பெண்ணும் இரண்டு இளைஞர்களும் ராமசாமியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் கேட்டுள்ளனர். பணத்தை கல்லாவில் வைக்காமல் வேறு இடத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தார் ராமசாமி.

 

இதனையடுத்து கல்லாவில் இருந்த சில்லறை காசுகளையும் பூஸ்ட் பாட்டில் பிரட் பாக்கெட் என கையில் கிடைத்தவற்றையும் அள்ளிக்கொண்டு மூவரும் தப்பி சென்றுள்ளனர். சிசிடிவி காட்சிகளை கொண்டு மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon