நடிகர் அஜித் குமாரின் சர்ச்சை போஸ்டர்..!
மதுரையில் நடிகர் அஜித்குமார் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து இருப்பது போன்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் தூங்கா நகரம் அஜித் ஃபேன்ஸ் என்ற பெயரில் ரசிகர்கள் சிலர் சட்டசபை முகப்பு கட்டத்தின் பின்னணியில் முதலமைச்சர் நாற்காலியில் நடிகர் அஜித்குமார் அமர்ந்திருப்பது போன்று போஸ்டரை வடிவமைத்து நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டியுள்ளனர்.
அந்த போஸ்டர்களில் எங்களின் வலிமையை பட்டி தொட்டியும் தெரியும், சட்டசபையும் அறியும் என்ற வாசகங்கள் இடம் பெற உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அஜித்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ரசிகர்களுக்கு தல என்று தன்னை அழைக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்திருந்தார்.






