நீட் விவகாரம் தொடர்பாக நாளை காலை 10.30க்கு ஆலோசனை..!
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிய மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காத நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரும் மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காத நிலையில் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஒரு கூட்டம் நடைபெறும் என்று முன்னதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை கட்சி பிரதிநிதிகள் 13 பேர் ஆலோசனையில் பங்கேற்கின்றனர்.





