--- --:--:-- --

இரண்டாவது திருமணத்திற்கு தயாரான இசையமைப்பாளர் டி.இமான்..!

Silverscreen.in Copyrighted Photos

D Imman at Panjumittai Audio Launch

மிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் இசையமைப்பாளராக கலக்கி வருபவர் டி.இமான். தமிழன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார், தேசிய திரைப்பட விருதையும் வென்றுள்ளார்.

 

இவர் கடந்த 2008ம் ஆண்டு மோனிகா என்பவரை திருமணம் செய்தார், இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளார்கள். ஆனால் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட டி.இமான் தனது மனைவியை விவாகரத்து செய்ததாக தெரிவித்தார்.

 

தற்போது வந்த தகவல் என்னவென்றால் டி.இமான் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டதாகவும், சென்னையை சேர்ந்த உமா என்பவரை மறுமணம் செய்கிறார் என்றும் தகவல் வருகிறது.

Right Menu Icon