உரிமம் பெறாத வளர்ப்பு நாய்கள் – அபராதம் விதிக்க குழு
சென்னை மாநகராட்சியில் உரிமம் பெறாமல் நாய்கள் வளர்ப்பவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்க குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவதற்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னையில் 57,602 வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறப்பட்டு, தடுப்பூசி போடப்பட்டு, மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி கால்நடைப் பிரிவு இணையத்தில் பதிவு செய்துள்ள 98,023 உரிமம் பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.





