பூஜைக்கு சென்ற கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை..!
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே கடந்த பிப்ரவரி மாதம் ஆசிரமத்தில் பூஜைக்கு சென்ற கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் சாமியாரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். ஆசிரமத்தில் சாமியார் மாணவிக்கு பாலியல் தொல்லை, தற்கொலைக்கு தூண்டியது விசாரணையில் உறுதியானதையடுத்து சிபிசிஐடி போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக பேட்டியளித்த உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் எனவும் ஆசிரமத்திற்கு சீல் வைக்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



