தகுதி நீக்க மசோதாவை விமர்சிக்க முதல்வர் ஸ்டாலினுக்கு தகுதி இல்லை – அமித்ஷா
பாஜக பூத் கமிட்டி முகவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று நெல்லை வந்தார். இந்த மாநாட்டில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட 5 நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள 28 சட்டமன்ற தொகுதி பூத் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து பாஜக பூத் கமிட்டி முகவர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய உள்துறை அமித் ஷா, தமிழில் பேச முடியாது வருத்தம் அளிக்கிறது. வீரம் விளைந்த தமிழக மண்ணை வணங்கி உரையை தொடங்குகிறேன். சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணை தலைவர் வேட்பாளராக அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி.
அடுத்த நாடாளுமன்ற தேர்தலின் போது சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணை தலைவராக இருப்பார். கங்கை கொண்ட சோழபுரத்தில் மாபெரும் விழா எடுத்தவர் பிரதமர் மோடி. தமிழக மக்களையும், தமிழ் மண்ணையும் மதிக்க கூடியவர் பிரதமர் மோடி. அப்துல் கலாமை குடியரசு தலைவராக்கியதும் என்டிஏ தான்.
ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் தீவரவாத முகாம்களை அழித்து பிரதமர் மோடி சாதனை படைத்துள்ளார். திருக்குறள் வழிநின்று ஆட்சி செய்கிறார் பிரதமர் மோடி. சிறை செல்லக் கூடியவர்கள் பதவியில் நீடிக்கக்கூடாது என்பதற்காகவே தகுதி நீக்க மசோதாட. தகுதி நீக்க மசோதா குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சிக்க தகுதியில்லை. அதிமுக – பாஜக கூட்டணி தான் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கப்போகிறது. இந்த கூட்டணி 39 சதவீத வாக்குகளை பெறும்.
உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டுமென ஸ்டாலின் ஆசைப்படுகிறார். அதேபோல் ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டுமென சோனியா காந்தி ஆசைப்படுகிறார். ஆனால் பாஜக இருக்கும் வரை இவர்களின் ஆசை என்றும் நிறைவேறாது என்றும் தெரிவித்தார்.






