ஆபத்தை உணராமல் ரயில்வே கேட்டை கடந்து சென்ற பொதுமக்கள்..!
தேனியில் ரயில்வே கேட் மூடிய பிறகு பொதுமக்கள் ஆபத்தை உணராமல் ரயில்வே கேட்டை கடந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி அரண்மனை புதூர் பகுதியில் ரயிலின் வருகைக்காக ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் சிறிது கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்பொழுது நடந்து செல்லும் போது மக்கள் ரயில் வருவதற்கும் ஆபத்தை உணராமல் ரயில்வே கேட்டை கடந்து சென்றனர்.
இதற்கு மாற்றாக தேனி அரண்மனை புதூர் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.






