--- --:--:-- --

கரை ஒதுங்கிய சீன சிலிண்டரால் நாகையில் பரபரப்பு..!

2

நாகையில் கரை ஒதுங்கிய சீன சிலிண்டரை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்க செய்தனர். நம்பியார் நகர் கடற்கரையோரம் கடந்த 14ஆம் தேதி சிலிண்டர் ஒன்று கரை ஒதுங்கியது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

 

தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் மூன்றடி சுற்றளவும் 30 கிலோ எடையும் கொண்ட சிலிண்டரை கைப்பற்றினர். விமானம் மற்றும் கப்பலில் பயன்படுத்தப்படும் சிலிண்டராக இருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பாக வெடிக்க செய்தனர்.

 

Right Menu Icon