நிலவின் மறுபக்கத்தை கண்டறிய சீனா ஆய்வு
நிலவின் மறுபக்கம் யாரறிவார் என்று கூறுகிறது ஒரு தமிழ் சினிமாபாடல். நிலவின் மறுபக்கம் எப்படி இருக்கும் என்பதை ஆராய சீனாவின் சாங்கே 4 விண்வெளித் திட்டம் முயல்கிறது. சாங்கே 4 செயற்கைகோள் நிலவில் கடந்த ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி வேன் கார்மன்கிரேட்டர் மூலம் நிலவில் இறங்கியது.
இதன் நோக்கம் தென்துருவ பகுதியான அயர்கின் பேஷினை ஆய்வு செய்வதுதான். இதுதான் நிலவின் அதிகபட்ச தூரமான பகுதியாகும். இப்பகுதியில் பாறைகளும் 39 அடி மண்ணும் இருப்பதை சீனாவின் ரோவர் கண்டுபிடித்துள்ளது.
அப்போலோ விண்வெளி வீரர்கள் நிலவின் முன்பகுதியில் கண்டுபிடித்த அதே அம்சங்கள்தான் நிலவின் பின் பகுதியிலும் காணக்கிடைக்கின்றன.






